திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் சட்டவிரோத செயல்களைத் தடுக்கவும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் தடுக்கவும் ரோந்துப் பணிகளுக்காக புதிய இருசக்கர வாகனங்களை மாவட்ட கண்காணிப்பாளர் துரை வழங்கி, ரோந்துப் பணியினைத் தொடங்கிவைத்தார்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் ரோந்துப் பணிகளுக்காக இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 43 வாகனங்களில் இரண்டு காவலர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ரோந்துப் பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோதச் செயல்களை உடனுக்குடன் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க 9498181220, 8300087700 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காவல் துறையினருக்குத் தடுப்பு உபகரணங்கள், கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.