தமிழ்நாடு முழுவதும் மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இன்று முதல் விநியோகிக்கப்படும் என தமிழ்நாடு அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதற்காக மே 2ஆம் தேதியும், 3ஆம் தேதியும் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. ஒரு நாளைக்கு 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் பொருள்கள் விநியோகிக்கப்படும் எனவும், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் நேரம் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்திருந்தனர்.
அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று மே மாதத்திற்கான ரேஷன் பொருள்கள் விநியோகம் தொடங்கியது. மக்களும் மாஸ்க் அணிந்தபடியும், தகுந்த இடைவெளியைக் கடைபிடித்தும் பொருள்களை நீண்ட வரிசையில் நின்று மக்கள் வாங்கிச் சென்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!