திருவாரூர் ரயில் நிலையம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வுதிய சங்கத்தின் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வனத்துறை காவலர், ஊராட்சி எழுத்தர் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் 7 ஆயிரத்து 850 ரூபாய் வழங்கிட வேண்டும்.
அனைத்து வகை ஓய்வூதியர்களுக்கும் குடும்பநல நிதியாக 3 லட்சம் ரூபாய் உயர்த்தி வழங்கிட வேண்டும். ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: மாநகர பேருந்தை கடத்தியவருக்கு வலைவீச்சு!