திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டுவந்தனர். அங்கு இந்த ஆண்டு சரியான நேரத்தில் பெய்த பருவமழையினால் சிறப்பான முறையில் சாகுபடி நடைபெற்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
இந்நிலையில், எதிர்பாராதவிதமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக அறுவடைக்கு தயார் நிலையிலிருந்த நெற்பயிர்கள் அனைத்தும் வயல்களில் சாய்ந்தது . இதனால் மழைநீரில் நெற்பயிர்கள் மூழ்கி பயிர்கள் அழுகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அவசரமாக அறுவடை பணிகளை தொடங்கியுள்ளனர்.
ஆனால், அரசாங்கம் இந்த நெற்பயிர்களில் ஈரப்பதம் அதிகமாக உள்ளதாக கூறி கொள்முதல் செய்யாமல் விவசாயிகளை அலைகழிப்பதாக புகார் தெரிவிக்கின்றனர். எனவே, தமிழ்நாடு அரசு விவசாயிகள் அறுவடை செய்த நெல்லின் ஈரப்பதத்தினை 20 சதவீதமாக உயர்த்தி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பல்லாவரத்தில் மர்ம பொருள் வெடித்தது - பொதுமக்கள் நடமாட தடை