திருவாரூர்: நன்னிலம் தாலுகா பேரூராட்சி 12 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று முடிவடைந்த நிலையில் தற்போது அதற்கான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் பேரளம் பேரூராட்சி வார்டு தேர்தல் முடிவுகளில் 8ஆவது வார்டு உறுப்பினராக அதிமுக சார்பில் போட்டியிட்ட செந்தில்குமார் என்பவர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், “பேரளம் பேரூராட்சிகள் நீண்டகாலப் பிரச்சினையாக இருப்பது நகர்ப்புறத்தில் வழியே செல்லக்கூடிய பாசன வாய்க்கால் பல ஆண்டுகளாகத் தூர்வாரப்படாமல் சாக்கடைகள் கழிவுகளால் நிரம்பிய வாய்க்காலை முழுமையாகத் தூர்வாரி கொடுப்பேன். இது தொடர்பாக பொதுப்பணித் துறை அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான நடவடிக்கை எடுப்பேன்.
பேரளம் கடைத்தெரு பகுதிகளில் ரயில்வே கேட் போடும் நேரத்தில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அதற்கு மேம்பாலம் அமைக்கும் பணியினைத் தமிழ்நாடு அரசிடம் தெரிவித்து அதற்கான நடவடிக்கை எடுப்பேன். அதேபோல பேரளம் பேரூராட்சிக்குள்பட்ட 11-வார்டுகளையும் தாண்டி என்னுடைய 8ஆவது வார்டை முன்மாதிரியான வார்டாக மாற்றிக் காட்டுவேன்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: திமுக அதிமுக இடையே தள்ளுமுள்ளு: தாம்பரத்தில் பரபரப்பு