திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "குடிமராமத்து பணிக்காக ஆசிய வங்கி மூலம் ரூ. 1,600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை பொறுத்தவரை இதுவரை 92 விழுக்காடுவரை மக்கள் பெற்று விட்டார்கள். மீதம் வாங்காதவர்களுக்கு விரைவில் கொடுக்கப்படும். அடுத்த ஜூன் மாதம் பொருட்களை வழங்குவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்.
அனைத்து மாவட்டங்களிலும் குடிமராமத்து பணிகள் தொடங்கிவிட்டன. அனைத்து இடங்களிலும் குடிமராமத்து பணி மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது ஒரு வரலாற்று சாதனை.
பருத்தியை கொள்முதல் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. பருத்தி விளைச்சல்களுக்கு ஏற்ப விலையை மத்திய, மாநில அரசுகள் நிர்ணயம் செய்யும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'இலவச மின்சாரம் வழங்கினால் மட்டுமே மின் திருத்தச் சட்டத்தை ஏற்போம்' - அமைச்சர் தங்கமணி