ETV Bharat / state

பயிர் காப்பீட்டுத் தொகையை பெற்றுத்தர விவசாயிகள் கோரிக்கை - திருவாரூர் விவசாயிகள்

திருவாரூர்: பயிர் காப்பீட்டுத் தொகையை பெற்றுத் தர தனியார் பயிர் காப்பீடு நிறுவனத்துக்கு முதலமைச்சர் அழுத்தம் கொடுக்க வேண்டும் என திருவாரூர் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

thiruvarur farmers request to tn cm for crop insurance

author img

By

Published : Dec 17, 2020, 4:44 PM IST

திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் புரெவி புயலால் பாதிப்படைந்துள்ளன. இந்தப் பாதிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு வாரத்திற்கு முன்பு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் அமைச்சர்களும், வேளாண் துறை அலுவலர்களும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களது கணக்கெடுப்பின்படி, உடனடியாக பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்க பயிர் காப்பீடு நிறுவனத்திற்கு முதலமைச்சர் கூடுதலாக அழுத்தம் அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், புரெவி புயல் காரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் 2 லட்சம் ஏக்கருக்கு மேலான நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. முன்னதாக, ஹிப்ஃப்கோ டோக்கியோ நிறுவனம் 60 நாள்களுக்குள் பயிர் காப்பீட்டினை வழங்கும் என உறுதியளித்திருந்தனர்.

கோரிக்கை விடுக்கும் விவசாயிகள்

இந்நிலையில், தற்போது ஒரு வருடங்களுக்கு மேலாகியும் பயிர் காப்பீட்டிற்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாமல் உள்ளது. இதனால் தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தனியார் பயிர் காப்பீடு நிறுவனத்திற்கு கூடுதலாக அழுத்தம் கொடுத்து பயிர் காப்பீடு தொகை 60 நாட்களுக்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதையும் படிங்க: புரெவி புயலால் சேதமடைந்த பயிர்களை ஆய்வு செய்த தோட்டக்கலைத்துறை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.