ETV Bharat / state

சம்பா விதை நெல்லுக்கான மானியத்தை உடனே அறிவிக்க கோரிக்கை

author img

By

Published : Oct 11, 2021, 2:16 PM IST

சம்பா விதை நெல்லுக்கான மானியத்தை உடனே அறிவிக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட உழவர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

சம்பா விதை நெல்லுக்கான மானியத்தை உடனே அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் இந்தாண்டு இரண்டு லட்சம் ஏக்கர் பரப்பளவில் உழவர் சம்பா சாகுபடி செய்ய இலக்கை நிர்ணயித்து, அதற்கான பணிகளும் தற்போது தொடங்கி நடைபெற்றுவருகிறது. சம்பா சாகுபடி செய்ய நிலத்தைச் சீராக சமன்படுத்தல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் உழவர் ஆர்வமாக ஈடுபட்டுள்ளனர்.

சம்பா விதை நெல் தட்டுப்பாடு நிலவிய நிலையில், வேளாண் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் அரசு விதைகளை வழங்கிவருகிறது. சென்ற ஆண்டு குறுவை சாகுபடிக்கு மானியம் காலம் தாழ்த்தி அறிவித்ததால் 80 விழுக்காடு தங்களுக்கு மானியம் பயன்படாமல் போய்விட்டதாக உழவர் தெரிவித்தனர்.

சம்பா விதை நெல்லுக்கான மானியத்தை உடனே அறிவிக்க கோரிக்கை

தற்போது சம்பா சாகுபடி செய்யும் பணி தொடங்கிய இந்த நேரத்தில் தமிழ்நாடு அரசு சம்பா விதை நெல்லுக்கான மானியத்தை அறிவித்தால் உழவருக்குப் பயனுள்ளதாக இருக்கும். உழவரின் வாழ்வாதாரத்தை கவனத்தில்கொண்டு சம்பா விதை நெல்லுக்கான மானியத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும்.

அதேபோல் குறிப்பிட்ட நெல் ரகங்களுக்கு மட்டும் இல்லாமல் அனைத்து நெல் ரகங்களுக்கும் பொருந்தும் வகையில் மானியம் வழங்கி அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: புதிய அவைத்தலைவர் குறித்து ஓபிஎஸ் - இபிஎஸ் தலைமையில் ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.