ETV Bharat / state

'ஆனைக்கொம்பன் ஈயால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கான காப்பீட்டுத் தொகையை வழங்குக'

திருவாரூர்: ஆனைக்கொம்பன் ஈயால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கவேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

author img

By

Published : Feb 28, 2020, 4:25 PM IST

agri greevance  விவசாய குறைதீர்வு முகாம்  திருவாரூர் செய்திகள்  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த்  thiruvarur farmers greevance meeting
ஆனைக்கொம்பன் ஈயால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கான காப்பீட்டுத் தொகையை வழங்குக

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள், கூடுதல் ஆட்சியர் கிஷோர், வேளாண் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து அரசாணை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்தனர். மேலும், விடுபட்டுள்ள திருச்சி, அரியலூர், கரூர் ஆகிய பகுதிகளையும் சேர்த்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கொண்டு வரவேண்டும்.

திருவாரூர் விவசாய குறைதீர் கூட்டம்

தற்போது நெல் நேரடி கொள்முதல் நிலையத்தில், கொள்முதல் பணிகள் தடையின்றி நடைபெற்று வருகிறது. ஆனால் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. அவற்றை உடனடியாக சேமிப்பு கிடங்குக்கு கொண்டு செல்ல வேண்டும். இந்த ஆண்டு சம்பா அறுவடைப் பணிகள் அதிக அளவில் நடைபெற்றிருந்தாலும், நெற்பயிர்களை ஆனைக்கொம்பன் ஈ தாக்கியதால் விவசாயிகள் அதிக மகசூல் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனைக்கொம்பன் ஈயால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கான காப்பீட்டுத் தொகையை வழங்கு வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தல்

பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்து ஆங்காங்கே அதிகாரிகள் கணக்கிட்டு வந்தாலும், அதற்கான காப்பீட்டு தொகை இதுவரை வழங்கப்படவில்லை. அவற்றை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை, விவசாய குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: அசைவம் உண்போம்! குணத்தால் ஒருவர் என்போம்!' - ஸ்டாலின் பிறந்தநாள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.