திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள ஏழு கிராமங்களும் புரெவி புயல் காரணமாக பெய்த கனமழையில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
குறிப்பாக அன்னதானபுரம், வாலூர், காளியாகுடி, கூத்தனூர், பண்ணைநல்லூர் உள்ளிட்ட ஏழு கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இந்நிலையில், அரசு அலுவலர்கள் தற்போது வரை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிடாமல் இருந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
புரெவி புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை! மேலும், கணக்கெடுப்பு பணிகள் நடைபெறாததால், தமிழ்நாடு அரசு அறிவித்த நிவாரணம் பாதிக்கப்பட்ட கிராம விவசாயிகளுக்கு கிடைக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க...திறமை இருக்க பயம் எதற்கு?- பள்ளிப் படிப்பை முடிக்காத சிறுவன் பைக் உருவாக்கி சாதனை