கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. அதன்படி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு கோயில்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது அமலில் உள்ள ஊரடங்கின்போது, சுப நிகழ்ச்சிகள் நடத்தத் தடை விதித்தும், ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் மட்டும் ஊரடங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தவும் அரசு அனுமதியளித்தது.
அதன்படி, திருவாரூர் நேதாஜி சாலையில் வசிக்கும் தங்க மாரியப்பன் என்பவரது மகள் செல்வ மகேஸ்வரிக்கும், சென்னையைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் தீபன் குமாருக்கும் இன்று காலை திருவாரூரிலுள்ள பெண் வீட்டில் வைத்து திருமணம் நடைபெற்றது.
இந்தத் திருமணத்தில் மணமக்கள் வீட்டார் எட்டு பேர் மட்டுமே கலந்து கொண்டனர். மணமக்கள் இருவரும் முகக்கவசங்கள் அணிந்தும் அரசு விதித்துள்ள வழிமுறைகளைக் கடைப்பிடித்தும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டவர்களுக்கு கிருமிநாசினி, முகக்கவசம் ஆகியவை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காவலர்கள், ஏழை மக்களுக்கு 'கல்யாண சாப்பாடு' வழங்கிய புது மணத்தம்பதி!