தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் திருவாரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் திருவாரூர் அருகேயுள்ள சுரக்குடியில் நேற்று (பிப். 25) நடைபெற்றது.
இம்முகாமில் 140 தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டது. அதில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கும், வேலையில்லா பட்டதாரிகளுக்கும், இளைஞர்களுக்கும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.
இறுதியாக நேர்முகத் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு, பணி நியமன ஆணைகளை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா வழங்கினார்.
இம்முகாமில் 1238 நபர்களுக்கு உடனடி பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டதாகவும், மேலும் 602 நபர்கள் காத்திருப்புப் பட்டியலில் இருப்பதாகவும், அம்மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மண்டல இணை இயக்குநர் சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மின் துறையில் காலி பணியிடங்கள்: விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு!