திருவாரூர்: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவத் தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு பொது மக்கள் பாதுகாப்பு கருதி ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பொது மக்களுக்களின் நலன் கருதி காணொலி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்,”திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் அலட்சியம் காட்டாமல் அனைவரும் தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து வேண்டும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். மேலும் ஒமைக்ரான் வைரஸ் தொற்றும் பரவும் சூழல் உள்ளதால் மக்கள் மிகுந்த பாதுகாப்பாக இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.