ETV Bharat / state

‘ரஜினி கூறுவது போல அரசியல் வெற்றிடம் இல்லை’ - அமைச்சர் காமராஜ் - திருவாரூர் மாவட்டச் செய்திகள்

திருவாரூர்: அதிமுக அரசு ஆட்சியை வலிமையாகவும் செம்மையாகவும் நடத்திக்கொண்டிருக்கும் நிலையில் ரஜினி கூறுவது போல தமிழ்நாட்டு அரசியில் வெற்றிடம் ஏற்படவில்லை என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

minister kamaraj
author img

By

Published : Nov 14, 2019, 10:24 PM IST

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூணடியில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட உணவுத் துறை அமைச்சர் காமராஜ் 994 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனையடுத்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கஜா புயலில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக திருவாரூர் மாவட்டம் உள்ளது. கஜா புயல் தாக்கி நாளையுடன் ஒரு வருடம் முடியும் நிலையில் இன்னும் சில கிராமங்களுக்கு பயிர் காப்பீடு வழங்கப்படவில்லை என்பது உண்மைதான்.

ரஜினி கூறுவது போல அரசியல் வெற்றிடம் இல்லை - அமைச்சர் காமராஜ்

மத்திய அரசின் காப்பீட்டுத்தொகை நிறுவனம் கணக்கெடுப்பின் போது சில இடங்களை பாதிக்கப்படாத இடம் என்று கணக்கீடு செய்துள்ளது. அது படிப்படியாக சரி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீட்டுத்தொகை கூடிய விரைவில் வழங்கப்படும்.

ரஜினி கூறுவது தமிழ்நாட்டில் வெற்றிடம் என்பதே இல்லை. அதிமுக அரசு ஆட்சியை வலிமையாகவும், செம்மையாகவும் நடத்திக்கொண்டிருக்கிருக்கிறது" என்றார்.

இதையும் படிங்க: ‘ஸ்டாலின் நாக்கில் சனி’ - அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு

Intro:

Body:ரஜினி எங்கு இருக்கிறார் தமிழகத்தில் வெற்றிடத்தை நிரப்புவதற்கு, அதிமுக ஆட்சியில் வெற்றிடம் என்பதற்கு இடமில்லை என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேட்டி.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு அவைகளுக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 994 பயணிகளுக்கு வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகைகள் வழங்கப்பட்டது.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்ததாவது,
கஜா புயல் பாதிப்பில் முக்கிய மாவட்டமாக திருவாரூர் மாவட்டம் உள்ளது. பாதிப்பானது பெரும் பாதிப்பு. கஜா புயல் சீற்றம் நாளையுடன் ஒருவருடம் முடிவடையும் நிலையில் சில கிராமங்களுக்கு பயிர் காப்பீடு வழங்கப்படவில்லை என்பது உண்மைதான். மத்திய அரசின் காப்பீட்டுத் தொகை நிறுவனம் கணக்கெடுப்பின் போது சில இடங்களில் பாதிக்கப் படாத இடம் என கணக்கீடு நடத்தப்பட்டுள்ளது. அவைகள் படிப்படியாக சரி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

அதிமுக அரசு செம்மையாக சென்றுக் கொண்டிருக்கும் தமிழகத்தில் வெற்றிடம் என்பதற்கு இடம் இல்லை. ரஜினி எங்கிருக்கிறார் வெற்றிடத்தை நிரப்புவதற்கு, தேவையில்லாமல் சிலர் வெற்றிடம் உள்ளது என கூறிக் கொண்டு இருக்கின்றனர் என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.