ETV Bharat / state

சாராயக் கடையில் துளைபோட்டு மதுபான பாட்டில்கள் திருட்டு! - முகந்தனூரில் பரபரப்பு - Theft at Tasmac Shop in Mukhandanur Village

திருவாரூர்: மதுக்கடைகளை மூட உத்தரவிட்டுள்ள நிலையில், முகந்தனூரில் மதுபானக் கடையின் பின்பக்க சுவரில் துளைபோட்டு அங்கிருந்த நூற்றுக்கணக்கான மதுபாட்டில்கள் திருடப்பட்டுள்ளன.

சாராயக் கடையில் துளைப்போட்டு சாமர்த்தியமான முறையில் திருட்டு!
author img

By

Published : Oct 19, 2019, 4:16 PM IST

திருவாரூர் அருகே முகந்தனூர் கிராமத்தில் கடந்த எட்டு மாதங்களாக ஊருக்கு வெளியே அரசு மதுபான கடை செயல்பட்டுவருகிறது. நேற்று இரவு பணிகளை முடித்துவிட்டு கடையினை ஊழியர்கள் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

மதுபான கடையின் பின்பக்க சுவரில் துளைபோட்டு அங்கிருந்த நூற்றுக்கணக்கான மதுபாட்டில்கள் திருட்டு

இந்நிலையில் இன்று காலை மதுக்கடையில் பணிபுரியும் சுரேஷ், கணேஷ் ஆகியோர் கடைக்குச் சென்று பார்த்தபோது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் கடையின் பின்பக்க சுவரில் துளையிடப்பட்டு நூற்றுக்கணக்கான மது பாட்டில்கள் சிதறிக் கிடந்துள்ளன.

இந்தத் தகவலறிந்த கொரடாச்சேரி காவல் துறையினர் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கடையின் ஷட்டர்களை உடைக்க முடியாததால் பின்பக்க சுவரில் ஆள்புகும் அளவில் துளையிட்டு கடையிலிருந்த பணம், நூற்றுக்கணக்கான மதுபாட்டில்களை அள்ளிச் சென்றுள்ளனர்.

புதுச்சேரி இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று மாலை 6 மணி முதல் தேர்தல் நாளான வரும் 21ஆம் தேதிவரை திருவாரூர் மாவட்டத்தில் மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட நிலையில் இந்த மது திருட்டுச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க:

"இதையும் மீறி கடைய அடைச்சா தற்கொலை செஞ்சுக்குவோம்" - சத்தியம் செய்த மதுப்பிரியர்கள்

Intro:

Body:திருவாரூர் அருகே டாஸ்மாக் மதுபான கடையின் ஷட்டரை உடைக்க முடியாததால் பின்பக்க சுவரில் துளைபோட்டு கடையில் இருந்த பணம் மற்றும் நூற்றுக்கணக்கான மதுபாட்டில்களை அள்ளிச் சென்ற திருடர்கள்.

திருவாரூர் அருகே முகந்தனூர் கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடை கடந்த 8 மாதங்களாக ஊருக்கு வெளியே செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு பணிகளை முடித்துவிட்டு கடையினை ஊழியர்கள் பூட்டி சென்றுள்ளனர்.

இந்நிலையில் மதுகடையில் பணிபுரியும் சுரேஷ், ஊழியர் கணேஷ் காலை வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர்கள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கடையின் பின்பக்க
சுவற்றில் துளையிடப்பட்டு நூற்றுக்கணக்கான மது பாட்டில்கள் சிதறி கிடந்துள்ளது.

இதனைகண்டு கொரடாச்சேரி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடையின் ஷட்டர்களை உடைக்க முடியாததால் பின் பக்க சுவரில் ஆள்புகும் அளவில் துளையிட்டு கடையில் இருந்த பணம், நூற்றுக்கணக்கான மதுபாட்டில்களை அள்ளி சென்றுள்ளனர்.

புதுச்சேரி இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று மாலை 6மணி முதல் தேர்தல் நாளான 21ம் தேதி வரை திருவாரூர் மாவட்ட மதுக்கடை மூட உத்தரவுவிடப்பட்ட நிலையில் இந்த மது கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேட்டி - சார்லஸ்
டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர்

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.