ETV Bharat / state

லைசென்ஸ் துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைக்க உத்தரவு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் லைசென்ஸ் பெற்றுள்ள துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைக்கும்படி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
author img

By

Published : Mar 14, 2019, 7:01 PM IST

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தலைமையில் மாவட்ட அலுவலக ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஊடக மையம், வாக்காளர் தொடர்பு மையத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tiruvarur  Collector Anand
வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழிஏற்பு நிகழ்ச்சி

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தது முதல் இதுவரை வாகன சோதனை மூலமாக ரூ.53 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்துள்ளவர்கள் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை 72 பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. காவல்துறை உதவியுடன் பதட்டமான வாக்குச்சாவடிகள் குறித்து கண்டறியப்பட்டு வருகிறது", என்றார்.

Intro:திருவாரூர் மாவட்டத்தில் 72 பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Body:திருவாரூர் மாவட்டத்தில் 72 பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி
நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஊடக மையம், வாக்காளர் தொடர்பு மையத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது...

திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தது முதல் இதுவரை வாகன சோதை மூலமாக உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 53 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்துள்ளவர்கள் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் திருவாரூர் மாவட்டத்தை பொருத்தவரை 72 பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் மேற்கொண்டு காவல்துறை உதவியுடன் பதட்டமான வாக்குச்சாவடிகள் குறித்து கண்டறியப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.