திருவாரூர் மாவட்டத்தில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் சிவபுண்ணியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள தமிழ்நாட்டு மக்களுக்கும், குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கும் ஏழாயிரத்து 500 ரூபாய் நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும் அதில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்:
1) விவசாயிகளின் வங்கிக் கடன், கூட்டுறவுக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
2) தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்ட நாள்களை 200 நாள்களாக அதிகரித்து நாள் ஒன்றுக்கு 600 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும்.
3) ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
4) ஊரடங்கு நேரத்திலும் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளதால் அடித்தட்டு, நடுத்தர மக்கள் திருமணம் உள்ளிட்ட விழாக்களை நடத்த முடியாமல் இருக்கின்றனர். எனவே மத்திய, மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தாலிக்கு தங்கம் இலவசமாக வழங்க வேண்டும்
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.