திருவாரூர்: மன்னார்குடி அருகே சவளக்காரன் ஊராட்சி அரசூர் கிராமத்தில் பகுதி நேர அங்காடியை தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சாந்தா உள்ளிட்ட வருவாய் துறை, வட்ட வழங்கல் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், திருவாரூர் மாவட்டத்தில் தற்போது மழை பெய்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே பெய்த கனமழையால் 96,623 ஹெக்டர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது 4 ஆயிரம் ஹெக்டர் பாதிப்பு கூடியுள்ளது. இந்த மழையால் சில இடங்களில் பெரிதும் பாதிக்கபட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ரேஷன் கடைகள் இல்லாமல் யாரும் எதுவும் செய்யமுடியாது அனைவருக்கும் பொது விநியோக திட்டத்தை வழங்க கூடிய மாநிலம் தமிழ்நாடு. எல்லோருக்கும் 100 விழுக்காடு உணவு வழங்குகிற மாநிலம் தமிழ்நாடு. எந்த காலத்திலும் ரேஷன் கடையை யாராலும் நிறுத்த முடியாது பொது விநியோக திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதல் நிலையை எட்டியுள்ளது என தெரிவித்தார்.
இதையும் படிங்க:ரஜினிக்குதான் ஆதரவு, பாஜகவுக்கு இல்லை -அர்ஜுன் சம்பத்