திருவாரூர் : திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் ’திருவிக’ என சுருக்கமாக அழைக்கப்படுகிறார். சமூகம், அரசியல், கல்வி எனப் பலதுறைகளில் ஈடுபாடு கொண்டு பல நூல்களை திருவிக எழுதியுள்ளார். சிறந்த மேடைப்பேச்சாளரான இவருக்கு ’தமிழ்த் தென்றல்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
முன்னதாக, திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சியில் இவருக்கு சிலை திறக்கப்பட்டது. இந்தச் சிலை வைக்கப்பட்டுள்ள கட்டடம் சாலையோரத்தில் இருப்பதால், தற்போது மதுப்பிரியர்கள் அதனைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், முறையான பராமரிப்பு இல்லாததால் சிலை இருக்கும் கட்டடத்தில் அருகிலுள்ள கடைக்காரர்கள் தங்களுடைய பழுதடைந்த பொருள்களை வைத்துள்ளனர்.
இந்நிலையில், தமிழுக்காகவும் சமூகத்திற்காகவும் பாடுபட்ட திருவிகவின் சிலை சாலையோரத்தில் முறையான பராமரிப்பு இல்லாமல் இருப்பது தமிழ் ஆர்வலர்களிடையே மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தற்போது இருக்கக் கூடிய இடத்திலிருந்து சிலையை அப்புறப்படுத்தி மாற்று இடம் தேர்வு செய்து பொதுமக்கள் பார்க்கக் கூடிய வகையில் சிலையை நிறுவ மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
![thiruvika statue to another place in thiruvarur](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvr-02-thiruvika-statue-change-social-interester-demand-vis-script-byte-tn10029_11112020140242_1111f_01057_303.jpg)
இதையும் படிங்க: புத்தர் சிலையை சேதப்படுத்திய இருவர் கைது