ETV Bharat / state

அரசு அலுவலர்களுக்குக் கரோனா- தற்காலிகமாக மூடப்பட்ட வட்டாட்சியர் அலுவலகம்! - அரசு அலுவலர்கள்

திருவாரூர்: கூத்தாநல்லூர் அருகே ஆறு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

வட்டாட்சியர் அலுவலகம்
வட்டாட்சியர் அலுவலகம்
author img

By

Published : Jul 9, 2020, 4:25 PM IST

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்துள்ள கூத்தாநல்லூர் பகுதியில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்தவர்கள், அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கிடையில் கூத்தாநல்லூர் வட்டாட்சியருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அதே பகுதியில் பணியாற்றிய 6 கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதனால் வட்டாட்சியர் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கரோனா பாதித்த 6 அரசு அலுவலர்களும், அம்மாவட்ட கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.