உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலக நாடுகள் முழுவதும், விமான நிலையங்கள், துறைமுகங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுவருகின்றன. தொடர்ந்து, பயணிகள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு பின்னரே வெளியில் அனுப்பப்படுகின்றனர்.
அதுபோல, இந்தியாவிலும் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. தற்போது, இந்தியாவில் 73 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட அனைவரும், தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் குழுவினரால், தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுவருகிறார்கள். இதேபோல தமிழ்நாட்டில் அனைத்து மருத்துவமனையிலும் கொரோனா வைரஸ் கண்காணிப்பு வார்டுகள் திறக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை சார்பில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஆய்வுசெய்ய, குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் கண்காணிக்கப்பட்டு, வார்டுகள் செயல்பட்டுவருகின்றன.
இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழ்நாடு சுகாதாரத் துறை இணை இயக்குநர் விமலா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வுமேற்கொண்டார். அப்போது வார்டுகளுக்கு வேண்டிய உபகரணங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துக்குமரன், மருத்துவர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: கொரோனா பாதிப்பு: இந்திய மாணவர்களின் ரத்த மாதிரிகளைச் சேகரிக்க இத்தாலிக்குப் புறப்படும் மருத்துவக் குழு!