மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கண்டித்து, இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதுதொடர்பாக, டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சிஏஏ ஆதரவாளர்கள் சிலர் தாக்குதல் நடத்தினர். அப்போது உயிரிழப்புகள் பல ஏற்பட்டன.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக மாணவர்கள், இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் டெல்லி வருகையின்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டிக்கும் விதமாக, அதை இரு தலைவர்களும் கண்டுகொள்ளாததை போன்ற வீதி நாடகத்தை, கல்லூரி வாயில் முன்பு நடத்தினர்.
இதன் மூலம். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை போற்றும் வகையில், இந்திய அரசியலமைப்பு முகவுரை உறுதிமொழியை 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஏற்றுக்கொண்டனர்.
இதையும் படிங்க: கலவரம் எல்லாம் வாழ்வின் ஒரு பகுதி - ஹரியானா அமைச்சர் சர்ச்சைப் பேச்சு!