ETV Bharat / state

மாநில அளவிலான மகளிர் சதுரங்கப் போட்டி - சென்னை மாணவி சாம்பியன்! - தமிழ்நாடு மகளிருக்கான சதுரங்க போட்டி

திருவாரூர்: மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் நடத்தப்பட்ட 48ஆவது தமிழ்நாடு மகளிருக்கான சதுரங்கப் போட்டிக்கான பரிசளிப்பு மற்றும் தேசியளவில் பங்கேற்க இருக்கும் மாணவிகளுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

State Level Women's Chess Competition
State Level Women's Chess Competition
author img

By

Published : Jan 6, 2020, 9:55 PM IST

திருவாரூரில் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட சதுரங்க கழகம் மற்றும் ஓஎன்ஜிசி காரைக்கால் இணைந்து 48ஆவது தமிழ்நாடு மாநில மகளிருக்கான சதுரங்கப் போட்டி கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை, கோவை, மதுரை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இருந்து 130க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஐந்து நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் நடைபெற்ற ஒன்பது சுற்றுகளில் எட்டு புள்ளிகளை சென்னையைச் சேர்ந்த சரண்யா, பாலகண்ணம்மா ஆகியோர் பெற்றிருந்தனர். இவர்களில் சரண்யா முன்னேற்றப் புள்ளிகள் அதிகம் பெற்று, சாம்பியன் பட்டம் பெற்றார்.

சதுரங்கப் போட்டியின் இறுதி நாளான இன்று வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, 75 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. மேலும் வெற்றி பெற்ற மாணவிகள் தெலங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய மகளிருக்கான சதுரங்கப் போட்டியில் தமிழ்நாடு சார்பில் கலந்துகொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில அளவிலான மகளிர் சதுரங்கப் போட்டி

இதையும் படிங்க: தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்: 10 மீ பிரிவில் தங்கம் வென்றார் சவுரப் சவுத்ரி!

Intro:

Body:திருவாரூர் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் நடத்தப்பட்ட 48வது தமிழ்நாடு மகளிருக்கான சதுரங்க போட்டிக்கான பரிசளிப்பு மற்றும் தேசியளவில் பங்கேற்க்க இருக்கும் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருவாரூரில் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட சதுரங்க கழகம் மற்றும் ஓஎன்ஜிசி காரைக்கால் இணைந்து 48வது தமிழ்நாடு மாநில மகளிருக்கான சதுரங்க போட்டி கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை, கோவை ,மதுரை, மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 23 மாவட்டங்களிலிருந்து 130க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். ஐந்து நாட்கள் நடைபெற்ற
இப்போட்டியில் 9சுற்றுகளில் 8புள்ளிகளை சென்னை சேர்ந்த சரண்யா, பாலகண்ணம்மா ஆகியோர் பெற்றிருந்தனர். இவர்களில் சரண்யா முன்னேற்ற புள்ளிகள் அதிகம் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றார்.

நடைபெற்ற சதுரங்க போட்டியின் இறுதி நாளான இன்று வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்ற 75ஆயிரம் ரொக்கபரிசு வழங்கப்பட்டது. மேலும் வெற்றி பெற்ற மாணவிகள் தெலுங்கான மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய மகளிருக்கான சதுரங்க போட்டியில் தமிழகம் சார்பில் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிகழ்ச்சியில் வேலுடையாளர் பள்ளி தாளாளர் தியாக பாரி, திருவாரூர் சதுரங்க கழக செயலாளர் அசோகன் உள்ளிட்ட மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.