திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள சோழங்குறிச்சி கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவரும் நிலையில், இவர்களுக்காக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தார் சாலை அமைத்துக் கொடுக்கப்பட்டது. தற்போது தார்சாலையானது மிகவும் மோசமான நிலையில் கப்பிகள் பெயர்ந்து சாலையின் இரு புறங்களிலும் மினி குட்டைகள் போல் உருவாகி தண்ணீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் பாதசாரிகளும் பயன்படுத்த முடியாத நிலையில் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்திற்காக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைத்து கொடுக்கப்பட்டது. தரமானதாக போடப்படாததால் தற்போது பெய்துவரும் கனமழையின் காரணமாக கப்பிகள் பெயர்ந்தும் சிறு சிறு குட்டைகளாக மாறி காட்சியளிக்கிறது. இதனால் நடந்துசெல்வதற்கு அச்சமாக உள்ளது. அவசர நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் கூட உள்ளே வருவதற்கு யோசிப்பதால் ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை நடந்து சென்று தான் மெயின் ரோடு சாலையை அடையும் நிலை 15 ஆண்டுகாலமாக நீடித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சரிடம் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கைகயும் எடுக்கவில்லை. எனவே தமிழ்நாடு அரசு கிராம மக்களின் நலனை கவனத்தில் கொண்டு எங்களுக்கு ஒரு தரமான தார்சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆற்றில் அடித்துச செல்லப்பட்ட சிறுவனை மீட்பதில் தாமதம்: கிராம மக்கள் சாலை மறியல்