திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வடுவூர் தமிழ்நாட்டின் இரண்டாவது பறவைகள் சரணாலயமாக கடந்த 1996-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
இந்தச் சரணாலயத்திற்கு ஆஸ்திரேலியா, ஸ்ரீலங்கா, இந்தோனேசியா, சைபீரியா, அந்தமான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து செங்கால் நாரை, நத்தை குத்தி, நாரை சாம்பல், கூடை பின்னல், கொண்டை ஊசிவால் உள்ளான் கிழவி, வெள்ளை அரிவாள் மூக்கன், ஊசிவால் திரவி, மூக்கன் பிறவி உள்ளிட்ட 38 வகையான பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வருகின்றன.
செப்டம்பர் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை இந்தப் பறவைகள் வடுவூருக்கு வருகின்றன. சுமார் 2 லட்சம் பறவைகள் ஆண்டுதோறும் இங்கு வரும் நிலையில், இந்தாண்டு 3 லட்சம் பறவைகள் கூடுதலாக வந்துள்ளன.
ஒவ்வொரு வருடமும் சுற்றுலாப் பயணிகள் பறவைகளை காண வரும் நிலையில், இந்தாண்டு கரோனாவால் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், பறவைகளைக் கண்டுகளிக்க சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சரணாலயத்தில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரவும் தமிழ்நாடு அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:தென்காசியில் பறவைகள் சரணாலயம்: இடம் தேர்வு செய்யும் பணி தீவிரம்!