திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டை கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் சித்த மருத்துவம் குறித்து கிராமப்புற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணியை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பத்மநாபன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உள்ளிக்கோட்டை கிராமத்தில் முக்கிய தெருக்கள் வழியாகச் சென்ற இப்பேரணியில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சித்த மருத்துவத்தின் பயன்கள் குறித்த வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு மாணவ, மாணவிகள் ஊர்வலமாகச் சென்றனர். இறுதியாக உள்ளிக்கோட்டை கடைவீதியில் உள்ள பெரியார் சிலை அருகே பேரணி நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் உள்ளிக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவி ஜோதி, கவுன்சிலர் ஜெயக்குமார், வட்டார மருத்துவ அலுவலர் அன்பு தமிழன், சித்த மருத்துவ அலுவலர் மஞ்சுளா தேவி, பள்ளி சிறார் நலத்திட்ட மருத்துவ அலுவலர் சிரஞ்சீவி, சுகாதார ஆய்வாளர் சந்திர சேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க... குடியாத்தம் எம்எல்ஏ இறுதி ஊர்வலத்தில் ஸ்டாலின் பங்கேற்பு