ETV Bharat / state

காதலியுடன் சேர்ந்து கல்லா கட்டிய ஏட்டு.. அரசு அதிகாரியாக நடித்து பல லட்சம் மோசடி.. நெல்லை ஷாக் - NELLAI MONEY FRAUD - NELLAI MONEY FRAUD

நெல்லையில் அரசு அலுவலராக நடித்து பல லட்சம் ரூபாயை மோசடி செய்த விவகாரத்தில் தலைமை காவலரும், அவரது பெண் தோழியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முருகராஜ் மற்றும் வளர்மதி
முருகராஜ் மற்றும் வளர்மதி (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2024, 5:02 PM IST

நெல்லை: வி.கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகராஜ் (41). இவர் நெல்லை மாநகர காவல்துறையின் கட்டுப்பாட்டு அறையில் தலைமைக் காவலராக பணிபுரிகிறார். இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த வளர்மதி (40) என்ற பெண்ணுக்கும் இடையே சில வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் முருகராஜ் வளர்மதியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். இதனால், வளர்மதிக்கு முருகராஜ் நெல்லையில் வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில், முருகராஜ் குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதற்காக வளர்மதியை பயன்படுத்தி வந்துள்ளார். அதன்படி, வளர்மதியை அரசு அதிகாரி என கூற வைத்து மோசடியில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளார். முருகராஜ் திட்டப்படி, வளர்மதி தன்னை மாவட்ட வருவாய் அலுவலர் என்றும் அரசு காரியங்களை சுலபமாக முடித்து தருவதாகவும் கூறி பலரிடம் பணத்தை ஏமாற்றி பறித்துள்ளார்.

குறிப்பாக புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெற்று தருவதாகவும், அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறி 2 பேரும் சேர்ந்து பலரிடம் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியுள்ளனர். முருகராஜ் காவல்துறையில் இருப்பதால் பல்வேறு நபர்களிடம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதன் மூலம் தனக்கு தெரிந்தவர்களுக்கு ஏதாவது அரசு உதவி தேவைப்பட்டால் வளர்மதியை அணுகும்படி கூறியுள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து அவர்களை ஏமாற்றி வந்துள்ளனர்.

இதையும் படிங்க: பணியில் இல்லாதவர்களுக்கு சம்பளம்.. ரூ.7.81 கோடி மோசடி செய்த இருவர் கைது!

இந்நிலையில், மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரான சசிகுமார் (40) என்பவருக்கு புறம்போக்கு நிலத்திற்கு பட்டா மாறுதல் வாங்கித் தருவதாக வளர்மதியும், முருகராஜும் கூறியுள்ளனர். இதனால் அவரை நம்பி ரூ.10 லட்சம் பணத்தை சசிகுமார் கொடுத்துள்ளார். ஆனால், பல மாதங்கள் ஆகியும் பட்டா மாறுதல் செய்து கொடுக்கவில்லை. இதுகுறித்து வளர்மதியிடம் பலமுறை கேட்டும் பணத்தை கொடுக்காததால் முருகராஜிடம் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் முருகராஜ் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை சசிகுமாரிடம் கொடுத்துள்ளார். அதை வாங்கிய சசிகுமார் தனது வங்கி கணக்கில் போட்டபோது அது பணம் இல்லாமல் திரும்பியுள்ளது. இதைதொடர்ந்து, அவர் சந்தேகம் அடைந்து விசாரித்தபோது, வளர்மதி போலி டி.ஆர்.ஓ. என்பதும், தலைமை காவலர் முருகராஜூடன் சேர்ந்து ரூ.10 லட்சத்தை மோசடி செய்ததையும் அவர் அறிந்தார்.

அப்போது முருகராஜ் நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் பணிபுரிந்ததால் நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் சசிகுமார் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் விசாரணை நடத்தினார்.

புகாரை தொடர்ந்து முருகராஜ் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது முருகராஜ் மற்றும் வளர்மதியை நெல்லை சந்திப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் இருவரும் சேர்ந்து பலரிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.