ETV Bharat / state

இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்திறனாய்வு தேர்வு தொடக்கம் - இரண்டாம் நிலை காவலருக்கான உடற்திறனாய்வு தேர்வு

தஞ்சாவூர்: இரண்டாம் நிலை காவலருக்கான எழுத்து தேர்வில் தேர்வானவர்களுக்கு  உடற்திறனாய்வு தேர்வு இன்று (ஜூலை.26) தொடங்கியது. இதில் சுமார் 500 பேர் பங்கேற்றனர்.

police selection
police selection
author img

By

Published : Jul 26, 2021, 5:11 PM IST

தஞ்சாவூர் காவல் சரகத்தில் இரண்டாம் நிலை காவலர் தேர்வு தொடர்பான எழுத்து தேர்வில் தேர்ச்சிப் பெற்ற தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் இன்று (ஜூலை.26) முதல் சான்றிதழ் சரிபார்ப்பு, உடற் திறனாய்வு தேர்வுகள் நடைபெறுகிறது.

அதன்படி இன்று (ஜூலை.26) தொடங்கி ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த ஆண் தேர்வாளர்களுக்கும், ஜூலை 30ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறையைச் சேர்ந்த பெண் தேர்வாளர்களுக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்திறனாய்வு நடைபெறவுள்ளது.

இதில் நாளொன்றுக்கு 500 நபர்கள் வீதம் 3 ஆயிரத்து 900 பேர் பங்கேற்கின்றனர். மைதானத்துக்கு வரும் தேர்வாளர்கள் நான்கு நாட்களுக்கு முன்பாக எடுக்கப்பட்ட கரோனா நெகட்டிவ் மருத்துவ சான்றிதழை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பாதிப்பு உள்ளவர்கள் அதற்கான உரிய சான்றிதழை மூன்றாவது நபர் மூலமாக உரிய நாளில் கொடுத்து அனுப்ப வேண்டும். அவர்களுக்கு மட்டும் உடற்திறனாய்வு, சான்றிதழ் சரிபார்ப்பு பின்னர் நடத்தப்படும்.

தேர்வாளர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், உடற்திறனாய்வு இன்று (ஜூலை.26) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஸ்முக் சேகர், தஞ்சாவூர் சரக டிஐஜி பிரவேஸ்குமார் உள்ளிட்டோர் உடற்திறனாய்வு தேர்வை பார்வையிட்டனர்.

இதையும் படிங்க: பனிமய மாதா பேராலய திருவிழா - பாதுகாப்புப் பணியில் 400 காவலர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.