திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள செருபனையூர் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் மகள் சக்திபிரியா (12). இவர் அதேப் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்துவருகிறார். நேற்று மாலை சக்திபிரியா வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக சக்திபிரியா மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து அங்கு விரைந்து வந்த எடையூர் காவல் துறையினர், சிறுமியின் உடலை மீட்டு, உடற்கூறாய்விற்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் காவல் துறையினர், விபத்து ஏற்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்து அதனை ஓட்டிவந்த தேவதானம் கிராமத்தைச் சேர்ந்த ஜான் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: கோவை இளம்பெண் விபத்து: அவசர வழக்காக விசாரிக்க டிராஃபிக் ராமசாமி மனு