திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே அமைந்துள்ளது பிரசித்திபெற்ற திருக்கோயில் திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயம். இங்கு இன்று அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சியானதை முன்னிட்டு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அதனையொட்டி சிறப்பு அபிஷேகங்களும், கருங்குவளை மலர்களால் தங்கக்கவசம் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனையும் நடைபெற்றது. அபிஷேகத்திற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் காலை ஆறு மணிக்கு மேல் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் கையில் ஏர் கலப்பையுடன் செல்வத்தை வழங்கும் பொங்கு சனீஸ்வர பகவான் காட்சியளித்ததை பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசித்து சென்றனர்.
இதையும் படிங்க: சனி பெயர்ச்சி விழாவில் பங்கேற்க சிறுவர்கள், முதியவர்களுக்கு அனுமதி கிடையாது