ETV Bharat / state

'மணல் கொள்ளையில் ஈடுபடும் சமூக விரோதிகள் தண்டிக்கப்பட வேண்டும்' - பி.ஆர். பாண்டியன் - மணல் கொள்ளையர்கள் தண்டிக்கப்பட வேண்டும் பி.ஆர்.பாண்டியன்

திருவாரூர்: மணல் கொள்ளையில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது அரசு உாிய நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும் என்று தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

பி.ஆர்.பாண்டியன்
author img

By

Published : Nov 3, 2019, 9:17 AM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பைங்காட்டூர், ஒரத்தூர் கிராமங்களின் ஆற்றுப் படுகைகளில் மணல் அள்ளப்பட்டுள்ள பகுதிகளை தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன், ஐம்பதிற்கும் மேற்ப்பட்ட விவசாயிகளுடன் சென்று நேரில் பார்வையிட்டார்.

பின்னா் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர். பாண்டியன், "காவிரி டெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தும் வடிகால் ஆறுகளில் முதன்மையானது கோரையாறு ஆகும். திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் பெய்யும் மழைநீர் வெள்ளப்பெருக்கு எடுத்து இதன் வழியே சென்று முத்துப்பேட்டை லகூன் கடல் பகுதியில் வடிய வேண்டும்.

கோட்டூர் ஒன்றியம் தட்டாங்கோவில் முதல் முத்துப்பேட்டை வரை சுமார் 25 கிமீ தூரம் ஆற்றின் இடதுகரை முழுவதும் தண்ணீர் பொழிவு ஏற்படும். பைங்காட்டூர் - ஒரத்தூர் இடையே 1994 முதல் 2008 வரை நான்கு முறை உடைப்பெடுத்து கோட்டூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் ஒன்றியம் முழுவதும் சுமார் மூன்று லட்சம் ஏக்கர் விளைநிலங்களும் லட்சக்கணக்கான குடிசைகளும் வெள்ள நீரால் அடித்து செல்லப்பட்டு பேரழிவை ஏற்படுத்தியது.

உடைப்பெடுக்கும் இடங்களில் மட்டும் ஆங்காங்கே நூறு மீட்டர் அளவில் தடுப்பு சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே தடுப்புச் சுவர் இல்லாத ஆபத்தான பகுதிகளில் பைங்காட்டூர் கிராமத்தில் படுகைகளிலும், ஆற்றின் மையத்திலும் சுமார் 25 அடி ஆழத்தில் பெருளவு மணல் அள்ளப்பட்டுள்ளது.

மேலும் மணல் அள்ள வசதியாக மேலடுக்கில் உள்ள வண்டல் மண்ணை அகற்றி ஆற்றின் நடுவே கரை அமைத்து தடுப்பு ஏற்படுத்தி ஆற்றின் நீரோட்டம் தடுக்கப்பட்டுள்ளது.இதனால் வெள்ள நீர் தடுக்கப்பட்டு கரைகளை உடைத்துக் கொண்டு வெளியேறி பேரழிவு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நீரோட்டத்தைத் தடுக்கும் வகையில் உள்ள கரையை அகற்றி 25 அடி ஆழம் உள்ள குழியை சமன் செய்திட வேண்டுகிறேன்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், சட்ட விரோதமாக பேரழிவை ஏற்படுத்தும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்திடுவதோடு, மணல் கொள்ளையில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட அரசை வலியுறுத்துவதாகவும் மறுக்கும் பட்சத்தில் தீவிர போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்த பி.ஆர். பாண்டியன்

மேலும் படிக்க: மணல் கொள்ளையால் ஆற்றுப்படுகைகள் அழிந்துபோகும் - பி.ஆர். பாண்டியன்

Intro:Body:மணல் கொள்ளையில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது மாவட்ட ஆட்சியர் உாிய நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும் மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் பேட்டி
மன்னார்குடியில் பைங்காட்டூர் , ஒரத்தூர் கிராமத்தில் படுகைகளிலும், ஆற்றின் மையத்திலும் சுமார் 25 அடி ஆழத்தில் பெருளவு மணல் அள்ளப்பட்டுள்ள பகுதிகளை தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன்
50க்கு மேற்ப்பட்ட விவசாயிகளுடன் சென்று நேரில் பார்வையிட்டார். பின்னா் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது

காவிரி டெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தும் வடிகால் ஆறுகளில் முதன்மையானது கோரையாறு ஆகும். திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் பெய்யும் மழை நீர் வெள்ளப்பெருக்கெடுத்து இதன் வழியே சென்று முத்துப்பேட்டை லகூன் கடல் பகுதியில் வடிய வேண்டும். கோட்டூர் ஒன்றியம் தட்டாங்கோவில் முதல் முத்துப்பேட்டை வரை சுமார் 25 கிமீ தூரம் ஆற்றின் இடதுகரை முழுவதும் தண்ணீர் பொழிவு ஏற்படும். பைங்காட்டூர் - ஒரத்தூர் இடையே 1994 முதல் 2008 வரை நான்கு முறை உடைப்பெடுத்து கோட்டூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் ஒன்றியம் முழுவதும் சுமார் 3 லட்சம் ஏக்கர் விளைநிலங்களும் லட்சக்கணக்கான குடிசைகளும் வெள்ள நீரால் அடித்து செல்லப்பட்டு பேரழிவை ஏற்படுத்தியது . உடைப்பெடுக்கும் இடங்களில் மட்டும் ஆங்காங்கு 100 மீட்டர் அளவில் தடுப்பு சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையில் தடுப்பு சுவர் இல்லாத ஆபத்தானப்பகுதிகளில் பைங்காட்டூர் கிராமத்தில் படுகைகளிலும், ஆற்றின் மையத்திலும் சுமார் 25 அடி ஆழத்தில் பெருளவு மணல் அள்ளப்பட்டுள்ளது. மேலும் மணல் அள்ள வசதியாக மேல் அடுக்கில் உள்ள வண்டல் மண்ணை அகற்றி ஆற்றின் நடுவே கரை அமைத்து தடுப்பு ஏற்படுத்தி ஆற்றின் நீரோட்டத்தை தடுக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ள நீர் தடுக்கப்பட்டு கரைகளை உடைத்துக் கொண்டு வெளியேறி பேரழிவு ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே நீரோட்டத்தை தடுக்கும் வகையில் உள்ள கரையை அகற்றி 25 அடி ஆழம் உள்ள குழியை சமன் செய்திட வேண்டுகிறேன்.சட்ட விரோதமாக பேரழிவை ஏற்படுத்தும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்திடுவதோடு, மணல் கொள்ளையில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட தமிழக அரசை வலியுறுத்துகிறேன். மறுக்கும் பட்சத்தில் தீவிர போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என எச்சரிப்பதாக தெரிவித்தார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.