திருவாருர்: மன்னார்குடி வ.உ.சி. சாலையில் 100 ஆண்டுகள் பழமையான கட்டடத்தில் அடிப்படை வசதிகள் இல்லாது இயங்கிவந்த வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்குப் பதிலாக அனைத்து வசதிகளும் கொண்டு புதிய கோட்டாட்சியர் அலுவலகம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்துவந்தது.
இந்நிலையில் மன்னார்குடியில் இரண்டு கோடியே நான்கு லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் குடியிருப்பு கட்டடத்தை சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாகத் திறந்துவைத்தார்.
மன்னார்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: செம்மண் கடத்தலில் திமுக பிரமுகர் - நடவடிக்கை எடுக்க விவசாயி கோரிக்கை!