திருவாரூர் மாவட்டத்திலுள்ள தனியார் மண்டபத்தில் நாட்டுப்புறக் கலைஞர்கள் முதலாம் ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவில் திருவாரூர் மாவட்ட வருவாய்க் கோட்டாட்சியர் ஜெயப்பிரதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில், நலிவுற்ற கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றியைத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நாட்டுப்புற கலைஞர்களின் கரகாட்டம், தப்பாட்டம், காளி ஆட்டம், குறவன் குறத்தி ஆட்டம் என பல்வேறு நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கவரும் வகையில் அரங்கேற்றப்பட்டது.
நாட்டுப்புற கலைஞர்களின் நீண்ட நாள் கோரிக்கையான வீட்டுமனைப்பட்டா, நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்கம் வைப்பதற்கான இடவசதி, மாவட்ட அளவில் வழங்கப்பட்டு வரும் விருதை அதிகப்படுத்த வேண்டும். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பு மிக்க கலைஞர்கள் அதிகம் உள்ளனர்.
அவர்களைக் கவுரவிக்கும் பொருட்டு கலைமாமணி விருது வழங்க வேண்டும் எனக் கலைஞர்கள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இந்த விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: திருமண விழாவில் பறை ஒலித்த பேரறிவாளன்!