நாளை மறுநாள் (நவ.14) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனால் பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வாங்க நகர் பகுதிகளுக்குச் சென்றுகொண்டிருக்கின்றனர்.
அரசு, பொதுமக்கள் நலன் கருதி கரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவித்துள்ளது. குறிப்பாக தீபாவளி பண்டிகைக்காக அரசின் அறிவுரையின்படி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பு அரசு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படவில்லை. சாதாரண நாள்கள்போல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து பேருந்துகளில் செல்லவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எனவே பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
தற்போது பொதுமக்கள் மாவட்ட போக்குவரத்து கழகம் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விமான கட்டணம் கிடுகிடு உயர்வு...! பயணிகள் அதிர்ச்சி...!