கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் ஐந்து மாதங்களுக்கும் மேலாக பேருந்து சேவையினை முடக்கி வைத்திருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செப்டம்பர் 7ஆம் தேதி முதல், மாவட்டங்களுக்கிடையேயான பேருந்து சேவைகளை தொடங்கிவைத்தார்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் பேருந்து சேவைகள் தொடங்கப்பட்ட நிலையிலும் பல வழித்தடங்களுக்கு பேருந்து போக்குவரத்து இதுவரை இயக்கப்படவில்லை. குறிப்பாக சென்னைக்கு ஓரிரு அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது.
அந்தப் பேருந்துகளிலும் முன்பதிவு செய்வதற்கு அலுவலர்கள் மறுத்துவருகின்றனர். மேலும், பயணிகளிடம் நபர் ஒன்றுக்கு கூடுதலாக 100 ரூபாயும் வசூலித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, திடீரென ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், தினசரி கூடுதலாக பேருந்து சேவையினை சென்னைக்கு தொடங்கவேண்டும் என்பதை வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: கரோனா என்ற பெயரில் கொள்ளையடிக்கும் அரசு - பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு