ETV Bharat / state

வேளாண் சட்டம் குறித்து விவாதிக்க தயாரா? முதலமைச்சருக்கு பி.ஆர். பாண்டியன் சவால் - அதிமுக

திருவாரூர்: வேளாண் சட்டம் குறித்து விவாதிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தயாரா? என பி.ஆர். பாண்டியன் சவால்விடுத்துள்ளார்.

பிஆர்.பாண்டியன்
பிஆர்.பாண்டியன்
author img

By

Published : Dec 11, 2020, 8:19 AM IST

காவிரி டெல்டா மாவட்டங்களில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் திருத்துறைப்பூண்டி பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:

நிவர், புரெவி புயல் தாக்குதலால் வரலாறு காணாத பெரும் மழைப்பொழிவை தமிழ்நாடு சந்தித்திருக்கிறது. குறிப்பாக கடலூர் தொடங்கி ராமநாதபுரம் மாவட்டம் வரையிலும் மிகப்பெரும் சேதத்தை விளைவித்திருக்கிறது.

குறிப்பாக 20 லட்சம் ஏக்கர் அளவிற்கு நீரால் சூழப்பட்டு தற்போது ஓரிரு நாள்களாக வடிய தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில் முதலமைச்சர், ஆறு லட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்ட நிலையில் கணக்கெடுப்பு அலுவலர்களுக்கு 1.32 லட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்டிருப்பதாக இலக்கம் சொல்லி கணக்கெடுப்பு செய்வது மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

எனவே இதனை மறுபரிசீலனை செய்து பாகுபாடின்றி விவசாயிகளுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க வேண்டும். இழப்பீட்டுத் தொகை குறித்து முதலமைச்சர் அறிவிக்காதது விவசாயிகள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனை உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

மத்திய அரசு கொண்டுவந்திருக்கிற விரோத சட்டங்களுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி எம்.எஸ்.பி.க்கு எழுத்துப்பூர்வமான உத்திரவாதம் தரப்படும் பாதிப்பு குறித்து சில மாற்றங்களைச் செய்த சட்டத்தை கொண்டுவர நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தான் ஆதரித்த ஒரே காரணத்துக்காக ஒட்டுமொத்த தமிழ்நாடு விவசாயிகளும் பாதிக்கக்கூடிய பேரழிவு சட்டத்திற்கு தொடர்ந்து வக்காலத்து வாங்கி பேசுவது விவசாயிகள் மத்தியில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அவர் உடனடியாக அந்தக் கருத்தைத் திரும்பப் பெற வேண்டும். இல்லையேல் முதலமைச்சரோடு எந்த இடத்திலும் பொது மேடையிலோ அல்லது அவரது அலுவலகத்தில் உயர் அலுவலர்கள் முன்னிலையிலோ அல்லது அவர் விரும்புகிற ஊடகத்தில் அவர் விவாதிக்க தயாராக இருப்பார் என்றால் நான் அவரோடு உட்கார்ந்து சட்டம் குறித்து விவாதம் நடத்த தயாராக இருக்கிறேன் என்று சவால்விடுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இல்லங்களில் 'முல்லை'யாக வலம்வந்த சித்ரா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.