இந்தியாவின் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் சர்க்கஸ் நடைபெறுகிறது. இந்நிலையில் கரோனா அச்சம் காரணமாக பறவைகள், விலங்குகள், கால்நடைகள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றனவா, இருப்பிடங்கள் முறையாகச் சுத்தம்செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றனவா? என ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது.
அந்த வகையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்றுவந்த பிரபல சர்க்கஸ் நிறுவனத்தில் மத்திய அரசின் விலங்குகள் நலவாரியமும் பீட்டா அமைப்பும் நேரிடையாக களத்தில் ஆய்வுசெய்தன.
அகில இந்திய விலங்குகள் நலவாரியத்தின் உறுப்பினர் சுமதி, பீட்டா அமைப்பின் நிர்வாகி டாக்டர் ரேஷ்மி, கால்நடை மண்டல இயக்குநர் தனபாலன், இணை இயக்குநர் ஜான்சன் சார்லஸ் ஆகியோர் சர்க்கஸ் வைக்கபட்டுள்ள இடங்களில் விலங்குகள், பறவைகளைப் பார்வையிட்டு இவைகள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றனவா என ஆய்வுசெய்தனர்.