திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விளமல் பகுதியில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இந்த புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதால், நகரப் பேருந்துகள் தவிர்த்து மற்ற புறநகர் அரசுப் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்கு வருவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பள்ளி மாணவர்கள், பெண்கள், வயதானவர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர், போக்குவரத்து அலுவலர்கள் எனப் பலரிடம் மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்துள்ளது.
இதனையடுத்து, வர்த்தக சங்கத்தினர் மற்றும் திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட கட்சியினர், பொதுமக்களும் இணைந்து புதிய ரயில் நிலையத்திலிருந்து பேரணியாகச் சென்று பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அரசுப் போக்குவரத்தகழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.