ETV Bharat / state

ஏற்கனவே அருகருகே 2... தற்போது மேலும் ஒன்று: பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - டாஸ்மாக்கை எதிர்க்கும் மக்கள்

திருவாரூர்: மணவாளன் பேட்டை பகுதியில் அருகருகே இரண்டு டாஸ்மாக் கடைகள் அமைந்திருக்கும் நிலையில் மேலும் ஒரு மதுபான கடையைத் திறப்பதற்கு அப்பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் அமைந்த நிலையில், புதிதாக திறக்கப்படவிருந்த டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

people-protest-against-new-tasmac-shop-in-thiruvarur

author img

By

Published : Mar 23, 2020, 10:00 AM IST

திருவாரூர் மாவட்டம் மணவாளன் பேட்டை அருகே நான்கு கிலோமீட்டர் தொலைவில் மாப்பிள்ளை குப்பம் என்ற இடத்தில் இரண்டு டாஸ்மாக் மதுபான கடைகள் இருக்கின்றன. அதேபோல் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் ஆண்டிபந்தல் என்ற இடத்தில் ஒரு டாஸ்மாக் மதுபான கடையும், மற்றொரு பகுதியில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் சன்னாநல்லூர் என்ற இடத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை இருக்கின்றன.

இந்நிலையில் மணவாளன் பேட்டையில் மீண்டும் ஒரு டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்படவுள்ளது. இதற்கு அருகில் புதிதாகத் தனியாருக்குச் சொந்தமான நகர் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதனால் நகர் பகுதியில் இடம் வாங்கிய உரிமையாளர்கள், பொதுமக்கள் நேற்று டாஸ்மாக் கடை திறக்கவிருந்த நிலையில், இங்கு திறக்கக்கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

இதனிடையே டாஸ்மாக் கடை இந்த பகுதியில்தான் அமைய வேண்டும் என மதுப்பிரியர்கள் தரப்பில் வாக்குவாதம் செய்தனர். இதனைத்தொடர்ந்து அங்கு வந்த நன்னிலம் காவல் துறையினர், இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி கலையச் செய்தனர். தொடர்ந்து டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க: டாஸ்மாக் - அமலுக்கு வந்தது மதுபான விலை உயர்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.