ETV Bharat / state

தற்கொலை வழக்கில் திருப்பம்; ஊர்மக்கள் அடித்துக் கொன்றதாக மனைவி புகார்... காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்!

திருவாரூர்: ஆனந்த் ராஜ் தற்கொலை வழக்கில் குடவாசல் காவல் துறையினர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகக்கூறி, கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

police station
காவல்நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்
author img

By

Published : Dec 18, 2019, 8:16 AM IST

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே சோளிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் ராஜ்(35). இவருக்கு லலிதா என்ற மனைவியும், ஆதிஷ், அகிலேஷ், சுப்ரியா என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், குடவாசல் பகுதியைச் சேர்ந்த ஜான் என்பவருடன் ஏற்பட்ட திருமணத்தைத் தாண்டிய நட்பின் காரணமாக, கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அவருடன் லலிதா சென்றுள்ளார். இதனால், மன உளைச்சல் அடைந்த ஆனந்த் ராஜ், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து, திடீரென்று மாயமான லலிதா குடவாசல் காவல் நிலையத்தில் தனது கணவரை ஊர்மக்கள் அடித்துக் கொன்று விட்டதாகப் புகார் அளித்துள்ளார். இந்த தகவலை அறிந்த ஊர்மக்கள், காவல் நிலையத்தில் ஒன்று திரண்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் லலிதா கணவரின் சொத்தை அடைவதற்காக பொய்யான புகார் அளித்துள்ளார் எனவும் மக்கள் கூறினர்.

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்

ஆனால், காவல் துறையினர் தங்கள் தரப்பு நியாயத்தைக் கேட்காமல் ஒருதலைப்பட்சமாக லலிதா தரப்பினருக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி, காவலர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: 'மேரி மீ...' ரசிகையின் கோரிக்கைக்கு இலங்கை கிரிக்கெட் வீரர் அளித்த சுவாரஸ்ய பதில்

Intro:

Body:திருவாரூர் அருகே ஆனந்தராஜ் என்பவரின் தற்கொலை வழக்கில் குடவாசல் காவல்துறையினர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி கிராம மக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே சோளிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் ராஜ்(35) இவரது மனைவி லலிதா (33) இவர்களுக்கு ஆதிஷ், அகிலேஷ், சுப்ரியா என்ற மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் லலிதா குடவாசல் பகுதியை சேர்ந்த ஜான் என்பவருடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவருடன் சென்று விட்டார். மனைவி வேறு ஒருவருடன் சென்றுவிட்டதால் ஆனந்தராஜ் மன உளைச்சல் காரணமாக தூக்கிவிட்டு இரண்டு நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அடுத்து மாயமான லலிதா குடவாசல் காவல் நிலையத்தில் தனது கணவரை ஊர்மக்கள் அடித்துக் கொன்று விட்டதாக புகார் அளித்துள்ளார். இந்நிலையில் ஊர்மக்கள் லலிதா தற்போது கணவரின் சொத்தை அடைவதற்காக சொத்து ஆசை காரணமாகும் தவறான புகார் அளித்து வருகிறார் என காவல் நிலையத்தில் ஒன்று திரண்டு முறையிட்டனர்.

ஆனால் காவல்துறையினர் தங்கள் தரப்பு நியாத்தை கேட்காமல் ஒருதலைப்பட்சமான லலிதா தரப்பினர்க்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.