திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சுமார் 50,000 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். இந்தாண்டு சரியான நேரத்தில் பெய்த பருவ மழையால் சிறப்பான முறையில் விவசாயம் நடைபெற்றுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.
ஆனால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிரில் மஞ்சள் நோய், புகையான் பூச்சி, பூஞ்சைகள் தாக்குதல் ஆகியவை அதிகமாக இருப்பதால் நெற்பயிர்கள் முழுவதும் சேதமடைந்து விட்டதால் நெல் கொள்முதல் நிலையங்களில் இந்த நெற்பயிர்களை கொள்முதல் செய்யப்படுவதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்திருக்கின்றனர்.
பிகில் பட விவகாரம்: அன்புச்செழியன் வீட்டில் 2ஆவது நாளாக தொடரும் ரெய்டு!
மேலும் பூஞ்சை புகையான் தாக்குதலால், நெற்பயிர்களின் ஈரப்பதம் குறைவதோடு, அதன் எடையும் குறைந்து விடுவதாக விவசயிகள் கூறுகின்றனர். ஏக்கருக்கு 35 மூட்டைகள் வர வேண்டியச் சூழலில் 10 முதல் 15 முட்டைகள் வரை மட்டுமே வருவதால் விவசாயிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
பெரும்பாலான விவசாயிகள் கடன் பெற்று விவசாயம் செய்து வருவதால், இது போன்ற பூஞ்சை நோய் தாக்குதலால் லாபம் கிடைக்குமா என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளனர். இவ்வேளையில் வேளாண் துறை அலுவலர்களும் தகுந்த நேரத்தில் வந்து நெற்பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கவில்லை என்றும் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனை மாவட்ட நிர்வாகம் கவனத்திற்குக் கொண்டுச் சென்று தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.