தமிழ்நாடு மருத்துவர் அலுவலர்கள் சங்க திருவாரூர் மாவட்டத் தலைவராகவும், அரசு மருத்துவராகவும் பணியாற்றி வருபவர் மணவழகன். இவர், மன்னார்குடி வட்டாரத்துக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுாியும் செவிலியர்களுக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மருத்துவர் மணவழகன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறி 15-க்கும் மேற்பட்ட பெண்கள், மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தனர்.
அதன்பின் புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.