ETV Bharat / state

'நன்னிலம் பகுதியில் விளைநிலங்களை யாரும் ஆய்வு செய்யவில்லை' - விவசாயிகள் குற்றச்சாட்டு - நன்னிலம்

புரெவி புயலால் பெய்த தொடர் மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 2 லட்சத்து 22ஆயிரத்து 120 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

nannilam flood affected land
'நன்னிலம் பகுதியில் விளைநிலங்களை யாரும் ஆய்வு செய்யவில்லை' - விவசாயிகள் குற்றச்சாட்டு
author img

By

Published : Dec 12, 2020, 4:54 PM IST

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் 3.70 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா, தாளடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். புரெவி புயல் காரணமாக பெய்த கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனை தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ், வேளாண் துறை அலுவலர்கள் பல்வேறு இடங்களில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் 2 லட்சத்து 22ஆயிரத்து 120 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்தார்.

ஆனால், நன்னிலம் ஒன்றியப் பகுதியில் இதுவரை எந்த ஒரு வேளாண் துறை அலுவலர்களும் நேரில் வந்து ஆய்வு செய்யவில்லை எனவும், தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தனது சட்டப்பேரவைத் தொகுதியான நன்னிலம் பகுதியில் இதுவரை எந்த ஒரு ஆய்வும் செய்யாமல் இருந்துகொண்டு இதுபோன்று பேட்டி கொடுத்துவருகிறார் என விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

'நன்னிலம் பகுதியில் விளைநிலங்களை யாரும் ஆய்வு செய்யவில்லை' - விவசாயிகள் குற்றச்சாட்டு

உடனடியாக அமைச்சர் தங்கள் பகுதியில் ஆய்வுசெய்து பாதிப்புகளை கணக்கெடுத்து, பின்னர் மத்திய அரசு குழுவிடம் அறிக்கை தாக்கல் செய்தால் மட்டுமே தங்கள் பகுதி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் என நன்னிலம் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதியில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சம்பா தாளடி சாகுபடி நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வெள்ளத்தால் சேதமடைந்த 3500 ஏக்கர் விளைநிலங்கள்: விவசாயிகள் வேதனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.