திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பணங்குடியில் மகளிருக்கான வங்கிக் கடன் வழங்கும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டு வங்கி கடன்களுக்கான காசோலைகளை வழங்கினார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ், ”தமிழ்நாட்டில் பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கு பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படமாட்டாது மக்கள் ஏற்கெனவே பயன்படுத்தி வந்த ஸ்கேனிங் முறையில்தான் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.
அதிமுகவில் யார் கூட்டணியில் இருந்தாலும் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.
திமுக மீது போடப்பட்ட வழக்கை காழ்ப்புணர்ச்சி மீது போடப்பட்டது என்றும் அதிமுக மீது போடப்பட்ட வழக்கு உண்மையானது என ஸ்டாலின் கூறுவதைக் கேட்டால் சிரிப்புதான் வருகிறது, எங்கள் மீது போடப்பட்ட வழக்கு பொய்யானது நாங்கள் எங்கு வேண்டுமானாலும் வழக்கை சந்திக்க தயாராக உள்ளோம்” என கூறினார்.
இதையும் படிங்க: திமுக நடத்துவது கிராம சபை கூட்டமா, அரசியல் கூட்டமா?