கரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருவாரூரில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முதலமைச்சர், பாஜக தலைமையில் கூட்டணி அமையுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, 'தேர்தல் வந்தால் தான், கூட்டணி குறித்து தெரியவரும் என்றும், கூட்டணியில் யார் என்பதே இன்னும் முடிவாகவில்லை' என்றும் தெரிவித்தார்.
மேலும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று தான் பிரதமருக்கு ஜூன் மாதமே கடிதம் எழுதியுள்ளேன் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக திருவாரூரில் 460 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும்; அரசு மருத்துவமனையில் போதுமான படுக்கை வசதிகள் உள்ளன என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதிபட முதலமைச்சர் கூறினார்.
'தேர்வில் தோல்வியடைந்தவர்களை தேர்ச்சிபெற்றதாக அறிவிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை'