ETV Bharat / state

மன்னார்குடியில் தேசிய மாணவர் படை பயிற்சி முகாம் - திருவாரூர் மாவட்டச்செய்திகள்

ஐந்து நாள்கள் நடைபெற்ற தேசிய மாணவர் படை பயிற்சி முகாமில், கும்பகோணம் எட்டாவது பட்டாலியன் படைப்பிரிவு அலுவலர்கள் பங்கேற்று மாணவர்களுக்குப் பயிற்சிகளை வழங்கினர்.

ncc training camp mannarkudi, Mannarkudi Rajagopala samy Government arts college, mannarkudi, தேசிய மாணவர் படை பயிற்சி முகாம், மன்னார்குடி ராஜகோபால சாமி அரசு கலைக் கல்லூரி,  மன்னார்குடி,  திருவாரூர் மாவட்டச்செய்திகள், Thiruvarur latest
NCC student camp on in Manaarkudi Rajagopala samy government arts college
author img

By

Published : Feb 22, 2021, 2:15 PM IST

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சாமி அரசு கலை கல்லூரியில் மூன்றாம் ஆண்டு தேசிய மாணவர் படை மாணவ மாணவிகளுக்கான பயிற்சி முகாம் ஐந்து நாள்கள் நடைபெற்றது.

இம்முகாமில் கும்பகோணம் எட்டாவது பட்டாலியன் படைப்பிரிவு அலுவலர்கள் பங்கேற்று மாணவர்களுக்குப் பயிற்சிகளை வழங்கினர். இதில் அணிவகுப்பு மரியாதை, போர் கலங்களில் ராணுவ வீரர்களின் செயல்பாடுகள், துப்பாக்கிச் சுடுதல், துப்பாக்கிகளைக் கையாளுதல் போன்ற பல பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இப்பயிற்சியைத் தொடர்ந்து நடைபெறவுள்ள தகுதித் தேர்வுகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர். மன்னை ராஜகோபால சாமி கலைக் கல்லூரி தேசிய மாணவர் படை முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் அலுவலர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் எட்டாவது பட்டாலியன் ராணுவப் படைப்பிரிவு கமாண்டிங் அலுவலர் லெப்டினென்ட் கர்னல் வினோத் சங்கர், இணை கமாண்டிங் அலுவலர் லெப்டினென்ட் கர்னல் ராஜு ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதயும் படிங்க: திருவாரூரில் அரசுடைமையாக்கப்பட்ட சசிகலா சொத்துகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.