திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள கொல்லாபுரம், நாகமங்கலம், தென்னலக்குடி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 600க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துவருகின்றனர். இந்நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்பு புரெவி புயல் காரணமாக பெய்த கனமழையால் கொல்லாபுரம் வழியாக செல்லக்கூடிய வாஞ்சியாற்றில் கரை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் முழுவதும் விவசாய நிலத்திற்குள் புகுந்ததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். மேலும், தண்ணீர் புகுந்து 5 நாட்களுக்கு மேலாகியும் நீர் வடியாததால், விவசாய நிலங்கள் கடல்போல் காட்சியளிக்கிறது.
ஏக்கருக்கு 20ஆயிரம் முதல் 25 ஆயிரம் கடன் பெற்று செலவு செய்து வந்தநிலையில், கனமழையால் பயிர்கள் அனைத்தும் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால், தமிழ்நாடு அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஏக்கருக்கு 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம்வரை உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: வெள்ளத்தால் சேதமடைந்த 3500 ஏக்கர் விளைநிலங்கள்: விவசாயிகள் வேதனை!