திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள மாப்பிள்ளைகுப்பம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவருடைய மனைவி கௌசல்யாவும் அவரது இரண்டு மகள்களும் வீட்டில் தனியாக வசித்துவந்தனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கௌசல்யாவும் அவரது மகள்களும் வெளியூரில் உள்ள தங்களுடைய உறவினர் வீட்டிற்குச் சென்ற நிலையில் இன்று மீண்டும் ஊர் திரும்பினர்.
அப்போது, கௌசல்யா வீட்டிற்கு வந்து பார்த்தபோது வாசல் கதவு, பின்புறக் கதவு இரண்டும் திறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் உள்ள 5 பவுன் நகை, 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது.
பின்னர் இது குறித்து நன்னிலம் காவல் துறையினருக்கு கௌசல்யா கொடுத்த தகவலின்பேரில் காவல் துறை வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும்?