ETV Bharat / state

உணவுத்துறை அமைச்சர் நலம் பெற வேண்டி பால்குடம் எடுத்த அதிமுகவினர்

திருவாரூர்: தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பூரண நலம் பெற வேண்டி பேரளத்தில் அதிமுகவினர் 1008 பால்குடம் ஏந்தி சிறப்பு அபிஷேகம் நடத்தினர்.

உணவுத்துறை அமைச்சர் பூரண நலம் பெற வேண்டி பேரளத்தில் அதிமுகவினர் 1008- பால்குடம் ஏந்தி சிறப்பு அபிஷேகம்

author img

By

Published : Jan 26, 2021, 3:00 PM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள திருமிச்சூர் மேகநாதர் கோயில் லலிதா சகஸ்ரநாமம் தோன்றிய திருத்தலம் அகத்தியர் லலிதா சகஸ்ர நாமத்தின் திருமிச்சூர் லலிதாம்பிகையை வழிபட்டு லலிதா நவரத்தின மாலை என்ற பாடலை இயற்றி அர்ப்பணித்த இடம் என்று கூறப்படுகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்தலத்தில், கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பூரண நலம் பெற வேண்டி அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் சி.பி.ஜி அன்பழகன் தலைமையில் 1008 பால் குடத்தினை அதிமுகவினர் பேரளம் மாரியம்மன் கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள லலிதாம்பிகை அம்மன் ஆலயம் வரை நடந்து சென்று அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடத்தினர்.

1008 பால்குடம் எடுத்த அதிமுகவினர்
1008 பால்குடம் எடுத்த அதிமுகவினர்

இந்நிகழ்ச்சியில் அதிமுக கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பால்குடம் எடுத்து வந்து அம்மனை வழிபாடு செய்தனர்.

இதையும் படிங்க:அமைச்சர் காமராஜ் உடல்நிலையில் முன்னேற்றம் : மருத்துவமனை தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.