திருவாரூர்: நன்னிலம் அருகே குடவாசல் பகுதியில் வெளிமாநில மற்றும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரிகள் லாரிகள் மூலம் நெல் மூட்டைகளை திருவாரூர் மாவட்டத்திலுள்ள அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனை செய்வதற்காக எடுத்து வந்துள்ளனர்.
இதனையறிந்த குடவாசல் பகுதி விவசாயிகள் நேற்று (ஜன 21) நள்ளிரவு லாரிகளை வழிமறித்து காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். மேலும், திருவாரூர் மாவட்ட வருவாய் ஆய்வாளர் சிதம்பரம் தலைமையில் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அப்போது ஆய்வு செய்ததில் நெல் மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. மூன்று லாரிகளில் ஒரு லாரி மட்டும் பிடிபட்டது. இதனை ஆய்வு செய்த அலுவலர்கள் நெல்மூட்டைகளை பதுக்கி வைத்த குடோனையும் பார்வையிட்டு நடவடிக்கை எடுத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: Facebook மூலம் நூதன முறையில் மோசடி - ஐடி ஊழியர் கைது